இங்கிலாந்தில் தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு


இங்கிலாந்தில் தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு
x

இங்கிலாந்தில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்து விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய விமான சேவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பச் சிக்கல் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்தின் தேசிய விமான சேவை தெரிவிக்கையில், "எதிர்கொள்ளும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானங்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் விமானங்கள் தாமதமாகலாம்" என வலியுறுத்தியுள்ளது.


Next Story