கனமழை, வெள்ளம்: பாதிப்புகளை நேரில் பார்வையிட பாகிஸ்தான் சென்ற ஐ.நா. பொதுச்செயலாளர்


கனமழை, வெள்ளம்: பாதிப்புகளை நேரில் பார்வையிட பாகிஸ்தான் சென்ற ஐ.நா. பொதுச்செயலாளர்
x

Image Courtesy: AFP

கனமழை, வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட ஐ.நா. பொதுச்செயலாளர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது.

இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலைமாற்ற மந்திரி தெரிவித்தார்.

கனமழையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் அது தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16.88 லட்சம் வீடுகள் அழிந்துள்ளது/சேதமடைந்துள்ளன என அந்நாட்டு தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் நிலைகுலைந்துள்ள பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சென்றுள்ளார். அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்க உள்ளார். அதேபோல், உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story