"பயங்கரவாத தாக்குதலின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது" - சீனா, பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி


பயங்கரவாத தாக்குதலின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது - சீனா, பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி
x

ஐ.நா. சபையின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உலகின் 5 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது என்றார்.

நியூயார்க்,

நியூயார்க்கில் உலக நாடுகள் பங்கேற்கும் ஐ.நா. பொதுச்சபையின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மந்திரி ஜெய்சங்கர், 18ம் நூற்றாண்டில் உலக பொருளாதாரத்தில் கால் பங்கை கொண்டிருந்த இந்தியா, 20ம் நூற்றாண்டில் ஏழ்மையான நாடுகளில் ஒன்று என காலனித்துவம் பெற்றதாக, தெரிவித்தார்.

அப்படி இருந்த இந்தியா 75வது சுதந்திர ஆண்டில் உலகளவில் பொருளாதாரத்தில் முன்னேறி 5வது இடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கடன், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜி-20 நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது என்றார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் மீது வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கடுமையாக சாடினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் சகித்துக் கொள்ள மாட்டோம். என்றார்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகள் மற்றும் அவர்களைப் பாதுகாக்கும் நாடுகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெசை சந்தித்த அவர், உக்ரைன் போர், ஐ.நா. சீர்திருத்தம், ஜி-20 நாடுகளுக்கு உள்ள உலகளாவிய சவால்கள் குறித்தும், காலநிலை நடவடிக்கை, உணவுப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் விவாதித்தார்.


Next Story