வெனிசுலாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அமெரிக்கா - வெனிசுலா வெளியுறவு மந்திரி குற்றச்சாட்டு

Image Courtesy: AFP
வெனிசுலாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளதால் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1811-ம் ஆண்டு வெனிசுலா சுதந்திரம் பெற்றது. இதனால் கடந்த 2 நூற்றாண்டுகளில் வெனிசுலாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதன்மூலம் வெனிசுலாவின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வெனிசுலா சுதந்திரம் அடைந்து 212 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு தலைநகர் கராகசில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் இரு நாடுகளின் அரசியல், கலாசார மற்றும் ராணுவ அணிவகுப்புகள் நடைபெற்றன. அப்போது கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக அமெரிக்காவை வெனிசுலா வெளியுறவு மந்திரி வில்லியம் காஸ்டிலோ கடுமையாக சாடினார்.
Related Tags :
Next Story