2023-ல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என கணிப்பு


2023-ல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என கணிப்பு
x

ஆகஸ்ட் மாதம் வரையிலான நிலவரப்படி அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.7 சதவீதமாக உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு வளர்ச்சி 2023-ம் ஆண்டில் குறையும் என்று கோல்ட்மேன் சாக்ஸ்(Goldman Sachs) நிறுவனம் கணித்துள்ளது. அதே சமயம் இந்த ஆண்டின் மீதமுள்ள காலங்களில் அந்நாட்டின் மத்திய வங்கி வலுவான கொள்கைகளை கடைப்பிடித்தால், வேலைவாய்ப்பின்மை முன்பு கணிக்கப்பட்டதை விட அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது முன்பு கணிக்கப்பட்ட 1.5 சதவீதத்தை விட குறைவாகும்.

அதே நேரம் அமெரிக்காவின் மத்திய வங்கியில் இந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தின்படி, வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளது என்றும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேலும் 50 புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான நிலவரப்படி அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.7 சதவீதமாக உள்ளது என்றும், இது அடுத்த ஆண்டு 4.1 சதவீதமாக உயர்க்கூடும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story