தைவானை ஆதரிக்கும் உறுதியான நடவடிக்கைகள் தொடரும்- அமெரிக்கா


தைவானை ஆதரிக்கும் உறுதியான நடவடிக்கைகள் தொடரும்- அமெரிக்கா
x

தைவானை ஆதரிக்கும் உறுதியான நடவடிக்கைகள் தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவான தைவானை, தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த சூழலில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றார்.

இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவின் ஒரே நாடு கொள்கையை உறுதிப்படுத்த இது போன்ற போர்ப்பயிற்சிகள் தொடரும் எனவும் சீனா எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளரும், இந்தோ பசிபிக் ஒருங்கிணைப்பாளருமான குர்ட் காம்ப்பெல், சீனாவின் மிரட்டலுக்கு மத்தியிலும் தைவானை ஆதரிக்கும் அமைதியான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.


Next Story