இலங்கைக்கான நிதி உதவியை நிறுத்த ஜப்பானுக்கு கோரிக்கை; அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் உரையாடலை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்!


இலங்கைக்கான நிதி உதவியை நிறுத்த ஜப்பானுக்கு கோரிக்கை; அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் உரையாடலை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்!
x

இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

கொழும்பு,

இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் இலங்கையின் புதிய அதிபர் ரனில் விக்ரமசிங்கே 2007 ஆம் ஆண்டு தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவிற்கும் ஜப்பான் அரசுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் தொடர்பான ஆவணத்தை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்துள்ளதாவது, 2007 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில், ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார உதவியை நிறுத்திக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.

அதற்கு ஜப்பான் அளித்த பதிலில், இலங்கை நாட்டின் தலைவர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டும், மக்களை புறக்கணிப்பதாலும், அதற்கான தண்டனையை அந்நாட்டு மக்கள் பெறக்கூடாது. எனவே உதவி வழங்குவதை நிறுத்த முடியாது என்று பதில் அளித்தது.

இவ்வாறு விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.


Next Story