கிரீஸ் நாட்டில் பரவும் காட்டுத்தீ; 2,500 பேர் வெளியேற்றம்


கிரீஸ் நாட்டில் பரவும் காட்டுத்தீ; 2,500 பேர் வெளியேற்றம்
x

கிரீஸ் நாட்டில் பரவி வரும் காட்டுத்தீயால் 2,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டில் இதுவரை இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் பெரிய அளவில் காட்டுத்தீ பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அந்நாட்டிற்கு உட்பட்ட கோர்பு தீவில் திடீரென பல இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால், தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் போராடி வருகின்றனர். இதுவரை 2,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

சுற்றுலாவாசிகள் அதிகம் விரும்ப கூடிய ரோட்ஸ் தீவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை பெரிய அளவில் காட்டுத்தீ பரவியது.

இதனை தொடர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக முன்பே தப்பி வெளியேறி விட்டனர் என சி.என்.என். ஊடகம் தெரிவித்துள்ளது.

கிரீஸ் நாட்டில் இதுவரையில்லாத வகையில் ஏற்பட்ட பெரிய காட்டுத்தீ இது என நிபுணர்கள் கணித்துள்ளனர். வெப்ப அலையால் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால், பல இடங்களில் தீ பரவி பாதிப்பு ஏற்படுத்தியது. இதனை அடுத்து அரசாங்கம் மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சுற்றுலாவாசிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் என 16 ஆயிரம் பேரை நிலப்பகுதி வழியாகவும், 3 ஆயிரம் பேரை கடல் பகுதி வழியாகவும் அழைத்து சென்றுள்ளது. கடந்த வார இறுதிக்குள் 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த ரோட்ஸ் தீவானது, கிரீஸ் நாட்டின் மிக பெரிய விடுமுறை கொண்டாட்டத்திற்கான தலங்களில் ஒன்றாக உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு 25 லட்சம் பார்வையாளர்கள் இந்த தீவுக்கு வருகை தந்துள்ளனர்.

1 More update

Next Story