பிரான்ஸ் அதிபர் குறித்து பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட பெண் கைது


பிரான்ஸ் அதிபர் குறித்து பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட பெண் கைது
x

குடியரசின் ஜனாதிபதியை அவமதித்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குறித்து பேஸ்புக்கில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் சில தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இம்மானுவேல் மேக்ரானை அவமதித்ததாக கூறப்படுகிறது.

அவரது பேஸ்புக் பதிவு குறித்து அந்நாட்டின் செயலாளர் அலுவலகம் போலீசில் புகார் அளித்த நிலையில், சம்பந்தபட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். குடியரசின் ஜனாதிபதியை அவமதித்ததாக அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் அந்த பெண்ணுக்கு சிறை தண்டனை அல்லது 12 ஆயிரம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பிரான்ஸ் அரசின் ஒய்வூதிய திட்ட மறுசீரமைப்பிற்கு எதிராக அந்நாட்டில் சமீப காலமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதும், இந்த திட்டத்தைக் கைவிட இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு மறுப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


Next Story