கைரேகை அற்புதங்கள் ராகு தரும் பலன்கள்


கைரேகை அற்புதங்கள் ராகு தரும் பலன்கள்
x
தினத்தந்தி 8 May 2017 9:27 AM GMT (Updated: 8 May 2017 9:27 AM GMT)

ராகுவுக்கு சொந்தமாக ராசிக்கட்டம் கிடையாது. அவர் ஒரு வீட்டில் குடியிருக்கும் உரிமை மட்டுமே பெற்றவர்.

ராகுவுக்கு சொந்தமாக ராசிக்கட்டம் கிடையாது. அவர் ஒரு வீட்டில் குடியிருக்கும் உரிமை மட்டுமே பெற்றவர். ஆனால் ஒரு வீட்டில் குடியிருக்கும் உரிமையை மட்டுமே வைத்துக் கொண்டு, அந்த வீட்டின் சகல உடைமைகளையும் தனதாக்கிக் கொள்ளும் வலிமை படைத்தவர். ராகு எங்கே அமர்ந்திருக்கிறாரோ, அந்த இடத்தின் பொறுப்புகளை ஏற்பதோடு, யாரோடு சேர்ந்திருக் கிறாரோ, அவரது தன்மைகளையும் தன்னோடு இணைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்.

மேலும் தன்னைப் பார்க்கிறவரின் தகுதிகளையும், தனக்குரியவையாக ஆக்கிக்கொள்ளும் வல்லமை கொண்டவர். தான் இருக்கும் வீட்டின் தன்மைகளை மட்டுமில்லாமல், தான் இருக்கும் வீட்டுக்கு உரியவரின் குணங்களையும் தனக் குரியதாக்கிக் கொள்ளும் சுபாவம் பெற்றவர்.

விருச்சிகத்தில் இருக்கும் ராகுவுக்கு, செவ்வாயின் குண விசேஷங்கள் சேரும். அது போல ரிஷபத்தில் உள்ள ராகுவுக்கு சுக்ரனின் தன்மைகள் கூடி நிற்கும். இப்படி 12 ராசிகளுக்கும் கொள்ள வேண்டும். சனிப் போலவே ராகு 3,6,11 ஆகிய வீடுகளில் தங்கும் போது உன்னதமான பலன்களை வாரி வழங்குவார். அரசாங்கம் ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. பதவி மகிமை ராகுவால் நிர்ணயிக்கப்படக்கூடிய ஒன்றாகும். பயணக்காரன் ராகு, அடிக்கடி பயணம் செய்ய வைப்பார். கெட்ட பெண்கள் சகவாசம், சூதாட்டம், உழைப்பில்லாத வருவாய் போன்ற பலன்களை ஜாதகருக்கு தன்னுடைய தசையில் கொடுப்பார். 11-ம் வீட்டில் உள்ள ராகு மிகவும் நல்லவர். 7-ம் வீட்டில் இருக்கும் ராகு பிற பெண் தொடர்பு கொடுக்க இடமுண்டு. பலம் இல்லாத ராகு படிப்பில் தடங்கல்களைக் கொடுப்பார்.

இனி கைரேகைப்படி ராகு கிரகத்தைப் பற்றி ஆராயலாம்.

கையில் அமைந்திருக்கும் புத்தி ரேகைக்கு அடியிலும், சந்திர மேடு, செவ்வாய் மேடு, சுக்ர மேடு சுற்றியிருந்து, விதி ரேகை இந்த மேட்டின் ஊடே சென்று சனி மேட்டை அடைகிறது. ராகு கிரகம் (மேடு) திடீர் செல்வத்தைக் குறிக்கும். ராகு மேடும், சந்திர மேடும் மிக நெருங்கி அமைந் திருந்தால், ‘கிரகண’ யோகம் அமையும். ராகு மேடு உப்பலுடன் மேல் நோக்கி அமைந்திருந்தால், பகைவர்கள் விலகுவர். எதிரியை வெல்லும் திறமை உண்டாகும். ராகு கிரகத்தின் பலத்தால் அந்த நபருக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். மறைமுக வருவாய் வந்து கொண்டே இருக்கும். பெண் தெய்வத்தால் அந்த நபர் சித்தி பெறுவார். ஜோதிட ஞானம் உண்டாகும். பிற பெண்களிடம் இருந்து பணம் பெறுவார். ராகு மேடு அமுங்கி மறைந் திருந்தால், தன் குடும்ப சொத்தை விற்றுவிட்டு அன்னிய இடம் செல்வார்.

-கடுக்கரை என்.செண்பகராமன் டி.ஏ., 

Next Story