இல்லறத்தைச் சிறக்கச் செய்யும் விரதம்
இந்த உலகத்தில் ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன் முதலில் உணர்த்தியவர் சிவபெருமான். அதற்காக அவர் தனது உடலில் சரி பாதியை பார்வதிதேவிக்கு தந்து அருளினார்
19–10–2017 கேதார கவுரி விரதம்
இந்த உலகத்தில் ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன் முதலில் உணர்த்தியவர் சிவபெருமான். அதற்காக அவர் தனது உடலில் சரி பாதியை பார்வதிதேவிக்கு தந்து அருளினார். சிவனிடம் பாகம் வேண்டி பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதார கவுரி விரதம்’ ஆகும். கேதாரம் என்பது ஈசனைக் குறிக்கும். கோதாரனை நினைத்து கவுரியாகிய அம்பாள் இருந்த விரதம் என்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது.
கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இருந்தபோது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடிப் பார்வதி பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர், சிவனை மட்டும் பலமுறை விழுந்து வணங்கினார். அம்பிகை நெருங்கி அமர, முனிவரோ வண்டு உருவம் எடுத்து இடையில் புகுந்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதனால் கோபமடைந்த தேவி இதற்கான காரணத்தை சிவனிடம் வினவினார்.
அதற்கு சிவன், ‘தேவி! பிருங்கி முனிவன் பாக்கியத்தை விரும்புபவன் அல்ல. மோட்சத்தை விரும்புபவன். காரணப் பொருள் ஒன்றேயெனக் கருதுபவன்; மற்றொன்றிருப்பதாகக் கருதாதவன்; ஆதலின் என்னை மாத்திரம் பிரதட்சணம் செய்தான்’ எனக் கூறினார்.
உடனே பார்வதி தேவி பிருங்கி முனிவரை அழைத்து, ‘நான்தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே. அது உமக்குத் தெரியுமா?’ எனக் கோபமாகக் கேட்டாள்.
முனிவரோ, ‘தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு சிவபெருமான் ஓர் ஊன்றுகோலைக் கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.
தனக்கு நேர்ந்த அவமதிப்பை, ஈசன் கண்டுகொள்ளவில்லையே என்று நினைத்த பார்வதிதேவி, கயிலாசத்தை விட்டு பூலோகம் வந்தாள். அங்கு கவுதம முனிவரது ஆசிரமத்தில் தங்கினாள். அன்னையின் வருகையால், பன்னிரண்டு வருடம் மழையின்றி வாடியிருந்த ஆசிரமத்து நந்தவனமானது துளிர்த்துப், பூத்து நறுமணம் வீசியது.
அப்போது தர்ப்பை முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர்; உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்து கொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து, அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமாதேவியாரைக் கண்டார். ‘தாயே! கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ?’ என்று கூறி வணங்கினார். மேலும் ‘ஈஸ்வரியே! நீர் பூலோகத்திற்கு எழுந்தருளிய காரணம் யாதோ?’ எனக் கேட்டார். பார்வதிதேவி கயிலாசத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் கூறினாள். இதையெல்லாம் கேட்ட முனிவர் பார்வதியை சிம்மாசனம் ஒன்றின் மீது எழுந்தருளச் செய்து, அவளுக்கு வேண்டும் உபசாரங்கள் செய்து வணங்கினார்.
பார்வதி தேவி கவுதமரை நோக்கி, ‘தபோதனரே! சிவபெருமானுக்கு இடது பாகத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, இப்பூவுலகில் யான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மிகவும் மகத்துவம் நிறைந்த விரதமொன்றும், அதனை அனுஷ்டிக்கும் முறைமையும் உரைத்தல் வேண்டும்’ எனக் கேட்டாள்.
முனிவர், ‘தாயே! பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப் பெயர். இந்த கேதாரீஸ்வரர் விரதம் புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமித் திதியிலிருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது. அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில் அனுஷ்டிக்கப்படும். அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப்படுவதாகும். விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல் ஒவ்வொரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து, அர்ச்சனை செய்து வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம், மாவிலை, அரளி மொட்டு, வாழைப்பழம், அதிரசம், முறுக்கு போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து பூஜித்து கேதார நாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும்’ என்று பார்வதியை நோக்கி கவுதமர் பணிவுடன் கூறினார்.
பார்வதி தேவியும் இதன்படி விரதமிருந்தார். விரதத்தின் 21–வது நாள் சிவபெருமான், சிவகணங்களோடு கவுரி தேவியான பார்வதிக்குக் காட்சி தந்தார். கவுதம முனிவரை ஆசீர்வதித்து, தனது மேனியில் பாதியை அன்னைக்கு தந்து அர்த்தநாரீஸ்வரராகிக் கயிலாயத்திற்கு எழுந்தருளினார். இதன் மூலம் ஆணும், பெண்ணும் சமம் என இந்த உலகுக்கு உணர்த்தினார். கேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். வெண்மையை கவுவர்ணம் என்பர். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் கவுரி என அழைக்கப்பட்டாள். கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள்.
இவ்விரத நாட்களில் இருபத்தொரு இழையிலாகிய காப்பை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்ளுதல் வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து, அதை அம்மனாக நினைத்து பூஜை செய்ய வேண்டும். விரத நாட்களில் உபவாசமிருக்க இயலாதவர் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பிலாப் பணியாரம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
கேதார கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி நினைத்த காரியம் எல்லாம் கைகூடும். விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம்.

Related Tags :
Next Story