ஆன்மிகம்

திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் + "||" + 7 steps to be placed in marriage

திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள்

திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள்
திருமணத்தின் போது தம்பதிகள் இருவரும், அக்னியை சுற்றி வலம் வருவார்கள். இந்த வலமானது 7 அடிகள் கொண்டதாக அமைய வேண்டும் என்பதே நியமம். சரி.. 7 அடிகள் நடப்பதற்கான பொருள் என்ன என்கிறீர்களா?.. வாருங்கள் அதை பார்ப்போம்.
திருமணத்தின் போது கணவன்- மனைவி இருவரும் அக்னியை வலம் வருவதை, வடமொழியில் ‘சப்தபதி' என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதைக் குறிக்கும் சொல் அது. அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும்போது மாப்பிள்ளை பெண்ணிடம் ‘இறைவன் உனக்கு துணையிருப்பான்’ என்று கீழ்கண்டவாறு தனது பிரார்த்தனையைச் சொல்கிறான்.


முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடியில்: ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடியில்: சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடியில்: லட்சுமி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்.

ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூசகமமான மனோவியல் விஷயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.

இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர் களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். உதாரணமாக நாம் சாலையில் நடக்கும்போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும்போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போகவிட்டுவிடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.

இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும்போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்துவிடும் என்பது ஒரு சூசகமமான விஷயம்.

இதை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து இந்து தர்மத்தில் அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல், மனோவியல் விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: விதவை மீது ‘ஆசிட்’ வீசி விட்டு கள்ளக்காதலன் தற்கொலை - திருவட்டார் அருகே பரபரப்பு
திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன், விதவை மீது ஆசிட் வீசி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. திருமணமான 2 மாதத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் புதுப்பெண் பிணம்: சப்-கலெக்டர் விசாரணை
திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
3. திருமணத்துக்காக இத்தாலி சென்ற தீபிகா படுகோனே
திருமணத்துக்காக, தீபிகா படுகோனே இத்தாலி சென்றார்.
4. திருமணம் முடிந்து 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
திருமணம் முடிந்து 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
5. திருமணத்திற்கு தயாராக இருக்கிறீர்களா?
நீங்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை தேடுபவராக இருந்தால், ஆண் என்றால் பெண் பார்க்க சென்றிருப்பீர்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...