முப்பெருந்தேவிகளின் சிறப்புகள்


முப்பெருந்தேவிகளின் சிறப்புகள்
x
தினத்தந்தி 10 Oct 2018 8:27 AM GMT (Updated: 10 Oct 2018 8:27 AM GMT)

புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.

வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது.

துர்க்கை தேவி


நெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை, வீரத்தின் தெய்வம், சிவ பிரியை, இச்சா சக்தியான துர்க்கையை, ‘கொற்றவை’, ‘காளி’ என்றும் அழைப்பார்கள். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபாட்டுக்குரியவர் துர்க்கை. மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. வெற்றியை கொண்டாடிய 10-ம் நாள் விஜயதசமியாகும்.

வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் நவ துர்க்கை என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் துர்க்கையின் அம்சங்கள்.

லட்சுமி தேவி


மலரின் அழகு, அருள் பார்வையுடன் அழகாக விளங்கு கிறாள். செல்வத்தின் தெய்வம், விஷ்ணு பிரியை, கிரியா சக்தி, லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பவள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து, வறு மையை அகற்றி அருள் புரிபவள். திருப்பதியிலுள்ள திருச் சானூரில் லட்சுமிக்கு தனி கோவில் அமைந்துள்ளது.

ஆதி லட்சுமி, மகா லட்சுமி, தன லட்சுமி, தானிய லட் சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமிகள் எனப்படுவர். இவர் கள் அனைவரும் லட்சுமி தேவியின் அம்சங்கள் ஆவர்.

சரஸ்வதி தேவி

வைரத்தின் அழகு, அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிப்பவள். கல்வியின் தெய்வம், பிரம்ம பிரியை, ஞான சக்தியான சரஸ்வதி தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் தனிக் கோவில் அமைந்துள்ளது. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வழிபாடு செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை திருவோணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. திருவோணம் அன்றே விஜய தசமி. ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. பல குழந்தைகள் கல்வியை அன்று தான் தொடங்குவார்கள். அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.

வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் அஷ்ட சரஸ்வதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

மங்கலம் தரும் மஞ்சள்

திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப் படுகிறது. எந்தப் பூஜையை நாம் செய்தாலும், மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைப்பதுடன் மலரும், குங்குமமும் வைத்துப் பூஜை செய் வது வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி. தலையில் விழுந்தால் அட் சதை. அப்படிப்பட்ட அட்சதை, முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும்.

விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால், குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும். ஆரோக் கியம் சீராகும். மஞ்சள் அரைத்துத் தடவி பல நோய்கள் குணமாவதை மருத்துவர்கள் எடுத்து ரைப்பர். அதற்காகத் தான் முன் காலத்தில் பெண்கள், முகத் தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு புது ஆடை வாங்கி அணியும் பொழுது, அதன் நுனியில் மஞ்சள் தடவி அணிந்தால் வஸ்திர பஞ்சம் ஏற்படாது.

பசு வழங்கும் ஐந்து பொருட்கள்

பால், தயிர், வெண்ணெய், கோமியம், சாணம் இந்த கலவை சக்தி பெற்றது ‘பஞ்சகவ்யம்’ என்று அழைக்கப்படுகிறது. சிரவண சடங்குகளில் பஞ்சகவ்யம் கொடுக்கப்படும். வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த இடத்தில் பஞ்சகவ்யம் தெளிக்கப்படும்.

கர்ப்பமுற்ற பெண்கள் 3-ம் மாதத்தில் இருந்து பஞ்சகவ்யம் சாப்பிடுவர். புதிதாக வாங்கும் ஆடைகளை பசுவின் முதுகில் வைத்து அணிந்துகொண்டால் நற்பலன் கிடைக்கும். நோயுற்ற குழந்தைகளின் முகத்திற்கு எதிரே பசுவின் வாலை 3 முறை சுற்றிக் காட்டினால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.

பசு கன்று ஈன்று பால் வழங்கும் பொழுது பதினோராவது நாள், பாலை இலவசமாக எல்லோருக்கும் வழங்கினால் அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

வாழ்க்கைத் துணை

மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். கணவன் அமைவ தெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்பர். ஜாதகத்தில் களத்திர ஸ்தானா திபதி சுக்ரன், தனது சொந்த வீட்டில் பலம் பெற்றிருந்தால், மிக, மிக அழ கும், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் உருவமும், மிருதுவாகப் பேசும் தன் மையும் கொண்ட வாழ்க்கைத் துணை அமையும். ராசியில் மட்டுமல்லாமல், அம்சத்திலும் சுக்ரன் இருக்கும் நிலையைப் பொறுத்தே வாழ்க்கைத் துணையின் குணத்தையும், நிறத்தையும் நாம் நிர்ணயிக்க முடியும். சப்தமா திபதி குருவாக இருந்து அது பலம் பெற்றிருந்தால், உயர்ந்த சிந்தனை உடையவராகவும், குடும்ப முன்னேற்றம் கருதி ஒத்துழைப்புச் செய்ப வராகவும், வீட்டுப் பிரச்சினையை வெளியில் சொல்லாதவராகவும் வாழ்க் கைத் துணை அமைவார்.

தொகுப்பு: சிவல்புரி சிங்காரம்

Next Story