தீபத்தில் முப்பெரும்தேவியர்


தீபத்தில் முப்பெரும்தேவியர்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:46 AM GMT (Updated: 21 Nov 2018 10:46 AM GMT)

முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.

ஆனால் சிறப்புமிக்க இந்நாளில் மட்டுமல்லாமல், தினமும் நாம் ஏற்றும் தீபத்தில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் இணைந்து இருந்து அருள்புரிகின்றனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தீபத்தில் இருந்து வெளிப்படும் சுடரில் செல்வ வளம் தரும் அன்னை மகாலட்சுமியும், அதன் ஒளியில் அறிவுச்சுடர் பரப்பும் அன்னை சரஸ்வதியும், சுடரில் இருந்து வெளிப்படும் வெப்பத்தில் வீரத்தை தந்து ஆரோக்கியம் தரும் அன்னை பார்வதியும் இருப்பதாக ஐதீகம். ஆகவே தான் ஒரு வீடு எல்லா நலன்களும் பெற தினமும் விளக்கேற்றி வைப்பது சிறந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.

16 வகை தீபங்கள்

தீபங்களில் 16 வகையான தீபங்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப தீபம் என பதினாறு வகையான தீபங்கள் உண்டு.

தீபத்திற்கான எண்ணெய்

எக்காலத்திலும் தீபம் ஏற்றுவதற்கு, சுத்தமான நல்லெண்ணெயை பயன்படுத்தாலம். ஏற்கனவே உபயோகித்த எண்ணெயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதே போல் கடலை எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது. இல்லத்தில் இறை வனின் அருளும், கல்வியும், செல்வமும் சிறந்து விளங்கிடவும், வாழ்வும் துன்பங்கள் இல்லாமல் சுகமாக அமையும் வேப் ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகிய ஐந்து எண்ணெய்களைக் கலந்து தீபம் ஏற்றுவது சிறப்பு.

- தொகுப்பு: சேலம் சுபா

Next Story