ஆன்மிகம்

காஞ்சீபுரம், கடம்பத்தூரில் அனுமன் ஜெயந்தி விழா + "||" + Kancheepuram, Kadambathur Hanuman Jayanti Festival

காஞ்சீபுரம், கடம்பத்தூரில் அனுமன் ஜெயந்தி விழா

காஞ்சீபுரம், கடம்பத்தூரில் அனுமன் ஜெயந்தி விழா
காஞ்சீபுரம், கடம்பத்தூரில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி விசேஷ அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானமும் நடைபெற்றது.

இதேபோல் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் பின்புறத்தில் அமைந்துள்ள 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. காஞ்சீபுரம் முத்தியால்பேட்டையில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலில் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது திருப்பந்தியூர் கிராமம். இங்கு விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 51 ஆயிரம் வடைகளால் ஆன மாலை செலுத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. முறைகேடு புகார் காரணமாக காஞ்சீபுரம் பட்டு கைத்தறி சங்கத்தலைவர் நீக்கம்
முறைகேடு புகார் காரணமாக காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி சங்கத்தலைவர் செல்வராஜ் நீக்கம் செய்யப்பட்டார்.
2. காஞ்சீபுரம், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்
காஞ்சீபுரம், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
3. சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...!
சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தமிழகத்தில் கிராமங்கள் தேர்தலை புறக்கணித்துள்ளன.
4. காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு
காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வம் வாக்கு சேகரித்தார்.
5. காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.