இந்த வார விஷேசங்கள் (23-1-2024 முதல் 29-1-2024 வரை)


தைப்பூச திருநாளான 25-ம் தேதி வடலூர் ராமலிங்க சுவாமிகள் அருட்பெரும்சோதி தரிசனம்.

23-1-2024 (செவ்வாய்)

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கில் பவனி.

* கோவை பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் புறப்பாடு.

* திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம், யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.

* மேல்நோக்கு நாள்.

24-1-2024 (புதன்)

* முகூர்த்த நாள்.

* பழனிமலை முருகன் கோவிலில், காலையில் தெய்வானை திருமணம், இரவு வள்ளி திருமணம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கு.

* சமநோக்கு நாள்.

25-1-2024 (வியாழன்)

* தைப்பூசம்.

* பவுர்ணமி.

* வடலூர் ராமலிங்க சுவாமிகள் அருட்பெரும்சோதி தரிசனம்.

* திருவண்ணாமலை அண்ணாமலையார் மாலையில் கிரிவலம் வரும் காட்சி.

* மேல்நோக்கு நாள்.

26-1-2024 (வெள்ளி)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சவுந்திர சபா நடனம்.

* கோவை பாலதண்டாயுதபாணி வாண வேடிக்கையுடன் தெப்பத் திருவிழா,

* பழனிமலை முருகப்பெருமான் தங்கக் குதிரை வாகனத்தில் பவனி. திருத்தணி முருகப்பெருமான்

பால் அபிஷேகம்.

* மேல்நோக்கு நாள்.

27-1-2024 (சனி)

* திருநெல்வேலி நெல்லையப்பர் தெப்ப உற்சவம், ரிஷப வாகனத்தில் பவனி.

* திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம்.

* திருக்குற்றால நாதர் கோவில் தெப்ப உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

28-1-2024 (ஞாயிறு)

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி மண்டல உற்சவம் ஆரம்பம்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

* வைத்தீஸ்வரன் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி விழா தொடக்கம்.

* கீழ்நோக்கு நாள்.

29-1-2024 (திங்கள்)

* சங்கடகர சதுர்த்தி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* வைத்தீஸ்வரன் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி புறப்பாடு.

* திருமயம் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.

* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

* கீழ்நோக்கு நாள்.


Next Story