இந்த வார விசேஷங்கள்: 20-2-2024 முதல் 26-2-2024 வரை


இந்த வார விசேஷங்கள்: 20-2-2024 முதல் 26-2-2024 வரை
x

திருத்தணி முருகன் கோவிலில் நாளை முருகப் பெருமான் வெள்ளி தேரில் புறப்பாடு.

20-ந் தேதி (செவ்வாய்)

* சர்வ ஏகாதசி.

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை.

* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல்.

* மேல்நோக்கு நாள்.

21-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* பிரதோஷம்.

* திருத்தணி முருகப் பெருமான் வெள்ளி தேரில் புறப்பாடு.

* காரமடை அரங்கநாதர் கருட வாகனத்தில் வீதி உலா.

* சமநோக்கு நாள்.

22-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.

* மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ஆலயத்தில் திருக் கல்யாணம்.

* மதுரை கூடலழகர் உபயநாச்சியாளர்களுடன் தங்க சிவிகையில் ஏகாந்த சேவை.

* திருப்போரூர் முருகப் பெருமான் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.

* மேல்நோக்கு நாள்.

23-ந் தேதி (வெள்ளி)

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம்.

* காங்கேயம் முருகப் பெருமான்- வள்ளி திருக்கல்யாணம்.

* மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ரத உற்சவம்.

* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

24-ந் தேதி (சனி)

* மாசி மகம்.

* பவுர்ணமி.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்பம்.

* திருமோகூர் காளமேகப் பெருமாள், யானை மலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தல்.

* கோயம்புத்தூர் கோணியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

25-ந் தேதி (ஞாயிறு)

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.

* கும்பகோணம் சாரங்கபாணி வெள்ளி தோளுக்கினியானில் பவனி.

* கோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.

* காங்கேயம் முருகப் பெருமான் விடையாற்று உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

26-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* கோயம்புத்தூர் கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.

* காரமடை அரங்கநாதர் சேஷ வாகனத்தில் புறப்பாடு.

* நத்தம் மாரியம்மன் பால்குட ஊர்வலம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.


Next Story