இந்த வார விசேஷங்கள்: 11-6-2024 முதல் 17-6-2024 வரை


Tiruttani Murugan temple
x

திருத்தணி முருகப்பெருமானுக்கு நாளை பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

11-ந் தேதி (செவ்வாய்)

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

* குரங்கணி முத்துமாரியம்மன் பவனி.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவாளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

*திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

12-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (வியாழன்)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி உற்சவம்

* திருக்கோளக்குடி சிவபெருமான் புறப்பாடு

* திருமயம் ஆண்டாள் புறப்பாடு

* கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (வெள்ளி)

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் திருவீதி உலா.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (சனி)

* கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு

* சாத்தூர் வேங்கடேசபெருமாள் திருவீதி உலா.

* திருக்கோளக்குடி சிவபெருமான் கேடய சப்பரத்திலும், இரவு பூத வாகனத்திலும் உலா.

* மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

* திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம்.

* சமநோக்கு நாள்.

17-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* பக்ரீத் பண்டிகை.

* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் குதிரை வாகனத்தில் பவனி.

* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் விழா தொடக்கம்.

* சமநோக்கு நாள்.


Next Story