திருவையாறில் பெண் பக்தைகள் மட்டுமே வடம்பிடித்து இழுத்த ஆடிப்பூரம் தேரோட்டம்


திருவையாறில் பெண் பக்தைகள் மட்டுமே வடம்பிடித்து இழுத்த ஆடிப்பூரம் தேரோட்டம்
x

திருவையாறில் ஆடிப்பூர உற்சவத்தின் 9-ம் நாள் விழாவாக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

தஞ்சாவூர்:

திருவையாறு ஸ்ரீஐயாறப்பர் கோயிலிலுள்ள ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் இன்று காலையில் நடந்தது. கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர உற்சவத்தின் 9-ம் நாள் விழாவாக தேரோட்டம் நடக்கிறது. இதில் பெண் பக்தைகள் மட்டுமே வடம்பிடித்து தேரிழுத்தார்கள்.

அம்மன்கோயில் வாசலிலிருந்து இன்று காலையில் தேர் புறப்பட்டு கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி மற்றும் வடக்குவீதி ஆகிய.ராஜவீதிகளில் பவனிவந்து தேர் நிலையடியை வந்தடைந்தது. பின்னர், அம்மனுக்கு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை திருவயாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.


Next Story