திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்


திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
x

ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். கோடை வெயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை பாதுகாக்க, தேங்காய் நார் விரிப்புக்கள் விரிக்கப்பட்டு, அதில் தண்ணீர் ஊற்றி நடந்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.




Next Story