சித்திரை திருவிழா 5-ம் நாள்: தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய மீனாட்சி-சுந்தரேஸ்வரர்


சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. 22-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி தொடங்கி வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஐந்தாம் நாளான இன்று தங்கச் சப்பரத்தில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

19-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், 20-ந் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. 22-ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. 23-ம் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

1 More update

Next Story