திருப்பதி சீனிவாச மங்காபுரத்தில் பாரிவேட்டை உற்சவம்


வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மான், புலி பொம்மைகள் மீது பகவான் சார்பில் அர்ச்சகர்கள் 3 முறை வேல் வீசி வேட்டையாடி வழிபாடு நடத்தினர்.

திருப்பதி:

திருப்பதி அருகே உள்ள சீனிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவிலில், சாக்ஷாத்கார வைபவங்கள் முடிந்தபின், நேற்று பாரிவேட்டை உற்சவம் உற்சாகமாக நடைபெற்றது.

இதையொட்டி காலை 11 மணிக்கு கோவிலில் இருந்து கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவமூர்த்திகள் ஊர்வலமாக வந்து ஸ்ரீவாரிமெட்டு அருகே உள்ள பாரிவேட்டை மண்டபத்தை அடைந்தனர். பின்னர் அங்கு வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மான், புலி பொம்மைகள் மீது பகவான் சார்பில் அர்ச்சகர்கள் 3 முறை வேல் வீசி வேட்டையாடி வழிபாடு நடத்தினர். இந்த ஆஸ்தானம் முடிந்து மாலையில் உற்சவ மூர்த்திகள் மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

பாரிவேட்டை நிகழ்ச்சியில் கலைஞர்களின் பக்தி பாடல்கள், பஜனை மற்றும் கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவில் அதிகாரிகள் வரலட்சுமி, கோபிநாத் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் ஆன்மிக செய்திகளை அறிந்துகொள்ள.. https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story