போக நந்தீஸ்வரர் கோவிலில் 12 அடி உயர கல் குடை


12 அடி உயர கல் குடை
x

நந்தி மலை அடிவாரத்தில் உள்ள போக நந்தீஸ்வரர் கோவிலில் நுணுக்கமான பல சிற்பங்களும், கலைப் படைப்புகளும் காணப்படுகின்றன.

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டம் நந்தி கிராமத்தில் அமைந்துள்ளது போக நந்தீஸ்வரர் கோவில். இந்த ஆலயம் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப் பழமையான கோவில்களில் ஒன்றாகும். ஆனால் அந்த கட்டு மானம் சிதிலமடைந்ததால் பிற்காலத்தில் கோவில் திராவிட முறைப்படி புனரமைக்கப்பட்டது. இந்தப் பணியைச் செய்தவர்கள் சோழர்கள் என்று சொல்கிறார்கள். பெங்களூருவில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நந்திமலை அடிவாரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.

இந்த ஆலயத்தில் சிவபெருமான் பிரதான தெய்வமாக இருக்கிறார். இந்தக் கோவிலில் நுணுக்கமான பல சிற்பங்களும், கலைப் படைப்புகளும் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் கோவிலின் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள கல் குடை (சக்கரம்). ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த கல் குடையானது, சுமார் 12 அடி உயரம் கொண்டது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும், முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக இந்த கல் குடை இருக்கிறது.


Next Story