இந்த வார விசேஷங்கள்: 28-5-2024 முதல் 3-6-2024 வரை


இந்த வார விசேஷங்கள்: 28-5-2024 முதல் 3-6-2024 வரை
x

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இந்த வாரத்தில் (21-5-2024 முதல் 27-5-2024 வரை) நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரங்களை காண்போம்.

28-ந் தேதி (செவ்வாய்)

* காஞ்சிபுரம் வரதராசர் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.

*திருக்கண்ணபுரம் சவுரிராஜர், மதுரை கூடலழகர் தலங்களில் விடையாற்று உற்சவம்.

*திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவாளி கொண்ட தங்கபூமாலை சூடியருளல்.

மேல்நோக்கு நாள்.

29-ந் தேதி (புதன்)

*காஞ்சிபுரம் வரதராசர் பல்லக்கில் தீர்த்தவாரி.

அகோபிலமடம் திருமத் 27-வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம்.

*திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்மமூலவருக்கு திருமஞ்சன சேவை.

*மேல்நோக்கு நாள்.

30-ந் தேதி (வியாழன்)

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம்அணிந்து வைரவேல்தரிசனம்.

*திருப்பதி ஏழுமலை யான் புஷ்பாங்கிசேவை.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர்மூலவருக்கு திருமஞ்சன சேவை.

மேல்நோக்கு நாள்.

31-ந் தேதி (வெள்ளி)

*திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி மூவர் உற்சவம் ஆரம்பம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

*திருவில்லிபுத்தூர்ஆண்டாள் புறப்பாடு.

*திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனசேவை.

* கீழ்நோக்கு நாள்.

1-ந் தேதி (சனி)

*திருவரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள்தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

*திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

மேல்நோக்கு நாள்.

2-ந் தேதி (ஞாயிறு)

முகூர்த்த நாள்.

* சர்வ ஏகாதசி.

* தேவகோட்டைரெங்கநாதர் புறப்பாடு.

*திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

*திருத்தணி முருகப்பெருமான் பால்அபிஷேகம்.

சமநோக்கு நாள்.

3-ந் தேதி (திங்கள்)

*சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

*திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம்எழுந்தருளல்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்


Next Story