வீடுகள் கட்டமைப்பில் தொழில் நுட்ப வரைபடங்கள்


வீடுகள் கட்டமைப்பில் தொழில் நுட்ப வரைபடங்கள்
x
தினத்தந்தி 21 July 2018 11:36 AM IST (Updated: 21 July 2018 11:36 AM IST)
t-max-icont-min-icon

குடிசையாக இருந்தாலும், மாளிகையாக இருந்தாலும் அவற்றை கட்டமைப்பதில் முறையான திட்டமிட்ட வழிமுறைகள் தேவை என்று கட்டுமான பொறியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வல்லுனர்கள் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வீடுகள் கட்டும்போது அவை எந்த அளவாக இருப்பினும், கீழ்க்கண்ட தொழில்நுட்ப வரைபடங்களை அடிப்படையாக கொண்டு பணிகளை மேற்கொள்வதுதான் சரியான அணுகுமுறை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பல்வேறு வரைபடங்கள்

பவுண்டேஷன் டிராயிங், ஸ்ட்ரக்சுரல் டிராயிங், புளோர் பிளான், லிண்டன் டிராயிங், ரூப் டிராயிங், பிளம்பிங் டிராயிங், எலக்ட்ரிகல் டிராயிங், எலிவேஷன் டிராயிங், பர்னிச்சர் லே-அவுட், ஒர்க்கிங் பிளான், சம்ப் பிளான், செப்டிக் டேங்க் பிளான், படிக்கட்டு பிளான், சுற்றுச்சுவர் டிசைன் ஆகிய வரைபடங்கள் கட்டுமான பணிகளின்போது பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அனைத்து கட்டுமானங்களுக்கும் மேற்கண்ட பல்வேறு ‘டிராயிங்’ வகைகளும் அவசியமானதாக இருப்பதில்லை.

மூன்று வரைபடங்கள்

குறிப்பாக, ‘புளோர் பிளான்’, ‘ஸ்ட்ரக்சுரல் டிராயிங்’ மற்றும் ‘பில்டிங் எலிவேஷன்’ ஆகிய மூன்று வரைபடங்கள் அனைத்து வகையான கட்டமைப்புகளுக்கும் அவசியமானவை ஆகும். அவற்றின் அடிப்படையில் வீடுகள் கட்டமைக்கப்படும் நிலையில் பல தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படுவதாகவும் கட்டுமான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story