கட்டுமான பணிகளுக்கு தேவையான சிமெண்டு அளவு


கட்டுமான பணிகளுக்கு தேவையான சிமெண்டு அளவு
x
தினத்தந்தி 1 Sep 2018 4:49 AM GMT (Updated: 1 Sep 2018 4:49 AM GMT)

* ஒரு சதுர மீட்டர் அளவில் நாலரை அங்குலம் அதாவது அரைக்கல் சுவர் அமைக்க 45 செங்கற்கள் மற்றும் 15 கிலோ சிமெண்டு தேவைப்படலாம்.

* ஒரு கன மீட்டர் அதாவது 3.28 அடி நீளம், அகலம் மற்றும் உயரம் கொண்டதாக 9 அங்குல கனம் உள்ள செங்கல் சுவர் கட்டுவதற்கு கிட்டத்தட்ட 450 செங்கற்கள் மற்றும் ஒன்றரை மூட்டை சிமெண்டு ஆகியன தேவையாக இருக்கும்.

* 100 சதுரடி கொண்ட சுவரின் மேற்பூச்சு பணிகளுக்கு (Wall Plastering) ஒன்றரை மூட்டை சிமெண்டு தேவைப்படும்.

* 1:2:3 என்ற விகிதம் கொண்ட சிமெண்டு கலவையில் நாலரை அங்குல கனம் கொண்டதாக ஒரு சதுரம் எனப்படும் 100 சதுரடி மேற்கூரை கான்கிரீட் (RCC) ஒரு கன மீட்டர் அளவில் அமைப்பதற்கு சுமார் 7 மூட்டை சிமெண்டு தேவைப்படும்.

* 1:4:8 என்ற விகிதம் கொண்ட கான்கிரீட் என்ற ஒன்றரை அங்குல ஜல்லி கான்கிரீட் போடுவதற்கு தோராயமாக 3 மூட்டை சிமெண்டு வேண்டும்.

* டைல்ஸ், கிரானைட் மற்றும் வெதரிங் கோர்ஸ் டைல்ஸ் ஆகியவை பதிக்கும் பணிகளில் 100 சதுரடி பரப்பளவுக்கு 2 மூட்டை சிமெண்டு தேவைப்படலாம். 

Next Story