வீட்டை மழை, வெயில், பனி பொழிவிலிருந்து பாதுகாக்கும் வால் க்லேடிங்


வீட்டை மழை, வெயில், பனி பொழிவிலிருந்து பாதுகாக்கும் வால் க்லேடிங்
x

எக்ஸ்டீரியர் வால் க்ளாடிங் (Exterior Wall Cladding) என்பது ஒரு கட்டுமான பொருளை(கற்கள், மரம், ஸ்டீல், பைபர்-சிமெண்ட் ) கொண்டு வீட்டின் வெளிப்புறச் சுவர் மீதான பூச்சு (பதிப்பது ) ஆகும். சீதோஷண நிலைகளால் கட்டிடங்கள் பாதிக்கப் பாடாமல் இருப்பதற்கு எக்ஸ்டிரியர் வால் க்ளாடிங் உதவி செய்யும். இது வீட்டிற்கு உறை அல்லது ரைன் கோட் (Rain Coat) என்றும் சொல்லலாம் . வீட்டை கடுமையான மழை, வெயில், பனி பொழிவிலிருந்து பாதுகாப்பதோடு வீட்டிற்குள் வெப்ப நிலையை குறைக்கவும், வெளிச்சத்தை அதிகரிக்கவும் உதவும். வீட்டை பாதுகாப்பதோடு வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தை அழகு படுத்தும். இனி கிளாட்டிங் வகைகள் பற்றி பாப்போம்.

ஸ்டான் கிளாட்டிங் (Stone Cladding)

கட்டிடத்தின் வெளிபுறச்ச சுவர் மீது கற்களை பதிப்பது ஸ்டோன் கிளாட்டிங் முறையாகும். இது மிகப் பழமையான முறையாகும். இதை கான்கிரிட் மற்றும் ஸ்டீல் பரப்பிலும் பயன்படுத்தலாம். கிளாட்டிங் முறைகளை ஒப்பிடும் போது ஸ்டோன் கிளாட்டிங் ஒரு இயற்கையான முறையாகும். கல் ஒரு இயற்கையான பொருள், மேலும் கடுமையான தட்ப வெட்பத்தை மற்றும் தீயின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடியது.எனவே ஸ்டோன் கிளாட்டிங் முறையை கட்டிடத்தின் தூண்கள், நீச்சல் குளங்கள், நீரூற்று மற்றும் தீ பயன்படுத்திடும் இடங்களில் பயன் படுத்தலாம்.மேலும் கட்டிடத்திற்குள் ஒலிகள் புகுவதை தடுக்கும். வீட்டை பாதுகாப்பதோடு கட்டிடத்தை அழகு படுத்தவும் செய்யும். ஆனால் இது பழுதானால் சரி செய்வது கடினமாகும். ஸ்டோன் கிளாட்டிங் செய்வதற்கு ஆகும் செலவும் சற்று கூடுதலாகும். ஸ்டோன் கிளாட்டிங் மீது பூஞ்சை காளான் வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

பிரிக் கிளாட்டிங் (செங்கல் )

பிரிக் கிளாட்டிங் பழமையான மற்றும் பிரபலமான கிளாட்டிங் முறையாகும். செங்கற்களை பொடி செய்து பயன்படுத்துவார்கள். பல வண்ணங்கள் மற்றும் தன்மைகள் கொண்ட இது (மென்மை; வழவழப்பு; சொரசொரப்பு) கட்டிடத்திற்கு அழகான தோற்றப் பொலிவை தரக்கூடியது. கடுமையான சீதோஷண நிலைகளிலிருந்து பாதுகாக்க கூடியது; நீர் புகை விடாது;நச்சு தன்மை இல்லாதது; கட்டிடத்திற்குள் ஒலிகள் புகுவதை தடுக்கும்; பராமரிப்பு செலவு மிகவும் குறைவு.

டிம்பேர் கிளாட்டிங் (மரம்)

டிம்பேர் கிளாட்டிங்கில் இருப்பது போன்று நாம் விரும்பியபடி அழகாக வடிவமைத்துக் கொள்ளும் வசதி வேறு எந்த கிளாட்டிங் முறையிலும் இல்லை. எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு கட்டிடங்களை வடிவமைக்க இந்த டிம்பேர் கிளாட்டிங் ஏற்றதாகும். இது கட்டிடங்களை வலிமை படுத்துவதோடு நீடித்து நிலைக்கக் கூடியது. இதன் சிறப்புக்கள்: நீல நடுக்கத்திலிருந்து பாதுகாக்கக் கூடியது; கடுமையான சீதோஷண நிலைகளிலிருந்து பாதுகாக்க கூடியது; கட்டிடத்திற்குள் ஒலிகள் புகுவதை தடுக்கும்.

மெட்டல் கிளாட்டிங் (உலோகம்)

மெட்டல் கிளாட்டிங் பொதுவாக கட்டுமானம் இல்லாத இடங்களிலும், மழை தடுப்பதாகவும் பயன் படுத்தப்பட்டும். இது எளிதாக மடக்கக் கூடியது; பல்வேறு வகைகளில் கட்டிடத்தில் பயன் படுத்தலாம். மெட்டல் கிளாட்டிங் நான்கு வகையான உலோகங்களை(ஸ்டீல், அலுமினியம், துத்தநாகம், செப்பு) உள்ளடக்கியது . இதன் மிகப் பெரிய நன்மை என்னவென்றால் மிக்க குறைந்த அளவே பராமரிப்பு தேவைப்படும். வருடத்திற்கு ஒரு முறை நீரினால் கழுவினால் போதுமானது. உலோகத் தகடுகளின் நிறம் மங்கும் போது சீதோஷண நிலைகளை எதிர்க்கக் கூடிய வண்ணம் தீட்டினால் போதுமானது; நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும் .

செராமிக் கிளாட்டிங் (பீங்கான்)

செராமிக் கிளாட்டிங் கட்டிடத்திற்கு பாரம்பரியம் தோற்றத்தை தரக் கூடியது. க்ரானைட், மார்பில் கற்களால் கட்டப் பட்டது போன்ற அழகை கொடுக்கும். இது முழுவதும் இயற்க்கை பொருள்களால் ஆனது. இது மிகவும் லேசானது; ஊதா நிற கதிர்வீச்சை தடுக்கக் கூடியது;பிற பொருட்கள் ஊடுருவ இயலாதது; நீடித்து நிலைக்கக் கூடியது.

பைபர் சிமெண்ட் (சிமெண்டால் ஆனது )

பைபர்-சிமெண்ட் சீமெண்ட்டைக் கொண்டு செயற்கையாக தயாரிக்கப் படுவது. இது தகடுகளாக பல வண்ண அமைப்புகளில் செய்யப்படும்.இது வெப்பத்தை தடுக்கக் கூடியது; நீர் ஊடுருவுவதை தடுக்கும்; கரையான்களை தடுக்கும்; கெட்டுப் போகாதது.இதன் பராமரிப்பு செலவு மிகைவும் குறைவு.ஆண்டிற்கு ஒரு முறை சோப் நீரினால் கழுவினால் போதுமானது.

வினைல் கிளாட்டிங் (பிளாஸ்டிக் )

வினைல் கிளாட்டிங் கட்டிடங்களின் தோற்றத்தை அழகு படுத்தும். இது பிளாஸ்டிக்கினால் செய்யப்படுவது.சீதோஷண நிலைகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்கக் கூடியது. மிகவும் வலிமையானது; நீர் ஊடுருவலை தடுக்கக் கூடியது; லேசானது மிக எளிதாக பொருத்தக் கூடியது; பல் வண்ணங்களில் கிடைக்கும் ; கரையான்களால் அரிக்க முடியாதது மற்றும் எல்லா கிளாட்டிங்கை விடவும் விலை குறைவானது. இதனால் இது அனைவராலும் விரும்பப் படுவது மற்றும் பிரபலமானது.

ஆனால் இது தீயை தடுக்க இயலாதது. பொதுவாக இது பெரும்பாலும் வணிக கட்டிடங்கள்,கடைகளில் அமைக்கப் படுகிறது. வீடுகளில் பெரும் அளவில் அமைக்கப் படுவது இல்லை.


Next Story