இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவருக்கான போட்டியில் 5 பேர்


இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவருக்கான போட்டியில் 5 பேர்
x
தினத்தந்தி 4 March 2020 5:24 AM IST (Updated: 4 March 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவருக்கான போட்டியில் 5 பேர் உள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், தேர்வு குழு உறுப்பினர் ககன் கோடா ஆகியோரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இவர்களுக்கு பதிலாக புதிய தேர்வாளர்களை தேர்வு செய்ய, மதன்லால், ஆர்.பி.சிங், சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியினர், தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 5 பேரை இறுதி செய்துள்ளனர். இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி, தமிழகத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், ராஜேஷ் சவுகான், ஹர்விந்தர்சிங் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இவர்களிடம் மும்பையில் இன்று நேர்காணல் நடத்தப்பட உள்ளது. முன்னாள் ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரும் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் இறுதி செய்யப்பட்ட பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. அடுத்த தேர்வு குழு உறுப்பினர்கள் பதவி நிறைவடையும் போது அகர்கரின் பெயர் பரிசீலிக்கப்படும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
1 More update

Next Story