டி20-ல் தொடர்ச்சியாக 12 வெற்றி: இந்தியா புதிய சாதனை


டி20-ல் தொடர்ச்சியாக 12 வெற்றி: இந்தியா புதிய சாதனை
x
தினத்தந்தி 27 Feb 2022 7:22 PM GMT (Updated: 27 Feb 2022 7:22 PM GMT)

இந்திய அணி கடைசியாக விளையாடி 12 டி20 போட்டிகளிலும் வெற்றிபெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தர்மசாலா,  

இந்திய அணி நேற்று இலங்கையுடன் மோதிய கடைசி டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது.  சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக பெற்ற 12-வது வெற்றி இதுவாகும். 

கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளை தோற்கடித்த இந்தியா அதன் பிறகு நியூசிலாந்து (3-0), வெஸ்ட் இண்டீஸ் (3-0) இலங்கை (3-0) அணிக்கு எதிரான 20 ஓவர் தொடர்களிலும் வாகை சூடியது. 

இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக ஆட்டங்களில் வென்ற ஆப்கானிஸ்தான், ருமேனியா (தொடர்ந்து தலா 12 வெற்றி) அணிகளின் சாதனையை இந்தியா சமன் செய்தது.


Next Story