பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையே இன்று இறுதி ஆட்டம்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
கிறைஸ்ட்சர்ச்,
நியூசிலாந்தில் நடந்து வரும் 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது. கிறைஸ்ட்சர்ச் நகரில் நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், ஹீதர் நைட் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. வலுவான எதிரிகளான இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சந்திப்பது 1988-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலியா சூப்பர் பார்மில் உள்ளது. லீக் சுற்றில் 12 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. அதனால் அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக தென்படுகிறது. அதே சமயம் இங்கிலாந்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.
முதல் 3 லீக்கில் தோற்ற அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி கண்டு எழுச்சி பெற்றது. எனவே களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும்.
Related Tags :
Next Story