2வது டி20 போட்டி; நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்..!


2வது டி20 போட்டி; நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்..!
x

Image Courtesy: @TheRealPCB

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஹாமில்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி தொடரில் முன்னிலை பெறும் நோக்கில் நியூசிலாந்து ஆட உள்ளது.

அதேவேளையில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பெற பாகிஸ்தான் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இன்று காலை 11.40 மணிக்கு தொடங்குகிறது.


Next Story