3வது டி20 போட்டி; பின் ஆலென் அதிரடி சதம்...நியூசிலாந்து 224 ரன்கள் குவிப்பு...!


3வது டி20 போட்டி; பின் ஆலென் அதிரடி சதம்...நியூசிலாந்து 224 ரன்கள் குவிப்பு...!
x

Image Courtesy: AFP

நியூசிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய பின் ஆலென் சதம் அடித்து அசத்தினார்.

டுனெடின்,

ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக பின் ஆலென் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஆலென் அதிரடியில் மிரட்ட மறுமுனையில் கான்வே 7 ரன், அடுத்து களம் இறங்கிய செய்பர்ட் 31 ரன், மிட்செல் 8 ரன், பிலிப்ஸ் 19 ரன், சாம்ப்மென் 1 ரன், சாண்ட்னெர் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஆலென் சதம் அடித்து அசத்தினார். அவர் 62 பந்தில் 137 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. இதையடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி ஆட உள்ளது.


Next Story