மும்பை பந்துவீச்சை சிதறடித்த அபிஷேக் சர்மா 63 ரன்களில் அவுட்


மும்பை பந்துவீச்சை சிதறடித்த அபிஷேக் சர்மா 63 ரன்களில் அவுட்
x

image courtesy; AFP

ஐதராபாத் அணி தரப்பில் அபிஷேக் சர்மா 63 ரன், டிராவிஸ் ஹெட் 62 ரன் எடுத்தனர்.

ஐதராபாத்,

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அகர்வால் 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஹெட்டுடன் அபிஷேக் சர்மா ஜோடி சேர்ந்தார்.

இருவரும் சேர்ந்து மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய ஹெட் 18 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதிரடியாக ஆடிய ஹெட் 24 பந்தில் 62 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து அபிஷேக் சர்மாவுடன் எய்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார்.

மறுமுனையில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து மார்க்ரம் உடன் கிளாசென் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் தற்போது ஆடி வருகின்றனர். தற்போது வரை ஐதராபாத் 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.


Next Story