ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் 2வது டி- 20; டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சு தேர்வு
ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் இடையிலான 2வது டி- 20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
சிலேட்,
ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.
அதன் பின்னர் 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் அணி வென்றது. இதன் மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதன் இரண்டாவது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
தற்போது போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதனை வங்கதேசம் அணி வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களில் விளையாடி வருகிறது.
இப்போட்டியை வங்கதேசம் அணி வென்றால் 20 ஓவர் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story