ஆசிய கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு...!
ஆசிய கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காபூல்,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது.
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடருக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லாஹ் ஷாஹிதி தலைமை தாங்குகிறார். இந்த அணியில் முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது போன்ற முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஆசிய கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்:-
ஹஷ்மத்துல்லாஹ் ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, இக்ராம் அலிகில், குல்பாடின் நைப், கரிம் ஜனத், அப்துல் ரஹ்மான், ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, சுலிமான் ஷாபி, பசல்ஹாக் பாரூக்கி.