வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டம்... டி காக் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது - எய்டன் மார்க்ரம்


வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டம்... டி காக் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது - எய்டன் மார்க்ரம்
x

Image Courtesy: AFP

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா.

மும்பை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் டி காக் 174 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து ஆடிய வங்காளதேசம் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 233 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேச அணி தரப்பில் மஹ்மத்துல்லா 111 ரன்கள் அடித்தார். இதையடுத்து இந்த வெற்றிக்கு பின்னர் தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசியதாவது,

இது எங்களுக்கு மற்றொரு நல்ல நாளாக அமைந்துள்ளது. இந்த போட்டியை இறுதிவரை கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைத்தோம். ஆனால் போட்டி கடைசி வரை சென்று இருந்தாலும் இறுதியில் இது நல்ல நாளாகவே அமைந்தது.

எங்கள் அணியின் கடைசி கட்ட ஓவர்கள் (டெத் பவுலிங்) வீசுவதில் பிரச்சனை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எங்கள் அணியின் பவுலர்கள் அனைவருமே டெத் ஓவர்களில் பந்துவீச கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த போட்டியில் குவிண்டன் டி காக் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அதேபோன்று கிளாசன் விளையாடிய விதமும் அருமையாக இருந்தது. எங்கள் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் வெவ்வேறு மாதிரி விளையாடக் கூடியவர்கள்.

இருந்தாலும் ஒரு அணியாக நாம் அதிலிருந்து பாசிட்டிவான விசயங்களை எடுத்து வெற்றி பெறுவது தான் அவசியம். தெம்பா பவுமா இந்த போட்டியிலேயே விளையாட வருவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் இன்று (நேற்று) விளையாடும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் இல்லை. எனவே நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அணியில் இணைவார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story