ஆசிய கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!


ஆசிய கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!
x

image courtesy;twitter/@BCCI

தினத்தந்தி 12 Sep 2023 9:10 AM GMT (Updated: 12 Sep 2023 10:22 AM GMT)

இலங்கை -இந்தியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மோதுகின்றன.

மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முந்தைய நாள் இரவு 11 மணி வரை விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் ஓய்வின்றி உடனடியாக களம் இறங்க வேண்டி உள்ளது. சோர்வின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.

இதே போல் சூப்பர்4 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்த தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாகும். தொடர்ச்சியாக 13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வீறுநடை போடும் இலங்கை அதே உத்வேகத்துடன் அடியெடுத்து வைக்கிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியில் ஒரே மாற்றமாக ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் படேல் இடம்பிடித்துள்ளார்.

இரு அணிகளுக்கான பிளெயிங் 11 பின்வருமாறு;-

இந்தியா : ரோகித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

இலங்கை: பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா(கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, மதீஷா பதிரனா.


Next Story