ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்


ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: மழை காரணமாக போட்டி  தொடங்குவதில் தாமதம்
x
தினத்தந்தி 17 Sept 2023 3:25 PM IST (Updated: 17 Sept 2023 3:26 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் இறுதிப்போட்டி மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.ஒருவேளை இன்று போட்டி தடைபட்டால் ரிசர்வ் டே முறையில் நாளை போட்டி தொடரும்.


Next Story