ஆசிய விளையாட்டு கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து வெண்கலம் வென்று அசத்திய வங்காளதேசம்..!


ஆசிய விளையாட்டு கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து வெண்கலம் வென்று அசத்திய வங்காளதேசம்..!
x

image courtesy: Bangladesh Cricket twitter

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து வங்காளதேசம் வெண்கலம் வென்று அசத்தியது.

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்காளதேசம் 5 ஓவரில் 65 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, ஆடிய வங்காளதேசம் 5-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேச அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.


Next Story