நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு


நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
x

image courtesy; ICC

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது.

டி20 தொடர் முடிவடைந்த உடன் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் கேப்டனாக தொடருகிறார்.

ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு;-

பேட் கம்மின்ஸ் ( கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலேக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்ன்ஸ் லபுசாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மைக்கேல் நெசர், மேத்யூ ரென்ஷா, சுமித் ( துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க்.


Next Story