9 வருடங்கள் கழித்து ஐபிஎல்-க்கு திரும்பும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்...!!


9 வருடங்கள் கழித்து ஐபிஎல்-க்கு திரும்பும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்...!!
x

மிட்செல் ஸ்டார்க் கடைசியாக 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடினார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காகவும் மற்றும் சொந்த நாட்டுக்காக விளையாடுவதற்கு முழு உடற்தகுதியுடன் இருப்பதற்காகவும் வெளிநாட்டுகளில் நடைபெறும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாட போவதாக ஸ்டார்க் இன்று அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு ஐபிஎல்-ஐ இலக்காகக் கொண்டுள்ளார்.அதற்கு முதற்கட்டமாக ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் தனது பெயரை சேர்க்க உள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்;

''2024ஆம் ஆண்டு தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். அதனால் யாராவது என்னை ஏலத்தில் வாங்கினால், நிச்சயம் விளையாடுவேன். அதேபோல் 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு மிகச்சிறந்த தொடக்கமாகவும், பயிற்சியாகவும் ஐபிஎல் தொடர் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

மிட்செல் ஸ்டார்க் கடைசியாக 2015ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் விளையாடினார். மொத்தமாக அவர் விளையாடிய 2 ஐபிஎல் தொடர்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவே விளையாடியுள்ளார். அதில் 27 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரை ஒப்பந்தம் செய்ய அனைத்து அணிகளும் முட்டி மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story