உலகக்கோப்பையை வென்றது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் நெகிழ்ச்சி!
இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சிட்னி,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் உலகக்கோப்பையை வென்றது குறித்து பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ' நான் இன்னும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். நாங்கள் நடந்து செல்லும்போது மக்கள் அனைவரும் உலகக்கோப்பை குறித்தே பேசுகின்றனர். தினமும் காலையில் விழிக்கும்போது உற்சாகத்துடன் இருக்கிறேன். வெற்றியின்போது நீங்கள் நிறைய கற்றுக்கொள்வீர்கள். ஆனால் தோல்வி அடையும்போது அதைவிட அதிகம் கற்றுக்கொள்வீர்கள்' என்று கூறினார்.
Related Tags :
Next Story