பேர்ஸ்டோ, அட்கின்சன் அபாரம்; நியூசிலாந்தை 98 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி...!


பேர்ஸ்டோ, அட்கின்சன் அபாரம்; நியூசிலாந்தை 98 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி...!
x

Image Courtesy: AFP 

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடர் முதலாவதாக நடைபெற்று வருகிறது. கடந்த 30ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் அடித்து நொறுக்கியது. இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 198 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் ஜானி பேர்ஸ்டோ 86 ரன், ஹாரி புரூக் 67 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. நியூசிலாந்து தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பின் ஆலென் 3 ரன், டெவான் கான்வே 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய டிம் செய்பர்ட் 39 ரன், க்ளென் பிலிப்ஸ் 22 ரன், மார்க் சாம்ப்மென் 15 ரன், டேரில் மிட்செல் 0 ரன், சாண்ட்னெர் 8 ரன், மில்னே 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் நியூசிலாந்து அணி 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 95 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.


Next Story