சுப்மன் கில் கேட்ச்சை தவறவிட்ட தீபக் சஹார்...!


சுப்மன் கில் கேட்ச்சை தவறவிட்ட தீபக் சஹார்...!
x

சுப்மன் கில் கேட்ச்சை தீபக் சஹார் தவறவிட்டார்.

அகமதாபாத்,

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹர்திக் பாண்ட்யா தலையிலான குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சஹா களமிறங்கி விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இப்போட்டியில் சுப்மன் கில் 4 பந்தில் 3 ரன் எடுத்திருந்த நிலையில் தேஷ்பாண்டே வீசிய பந்தை விளாசினார். அந்த பந்து நேராக தீபக் சஹாரிடம் கேட்ச் ஆக சென்றது.

ஆனால், தீபக் சஹார் அந்த கேட்ச்சை தவறவிட்டார். கடந்த குவாலிபையர் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் கேட்சை மும்பை வீரர் தவறவிட்ட நிலையில் அவர் சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story