13 ஆண்டுகளுக்கு பின் சேப்பாக்கத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை- ரசிகர்கள் உற்சாகம்!


13 ஆண்டுகளுக்கு பின் சேப்பாக்கத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை- ரசிகர்கள் உற்சாகம்!
x
தினத்தந்தி 6 May 2023 10:58 PM IST (Updated: 6 May 2023 11:07 PM IST)
t-max-icont-min-icon

13 ஆண்டுகளுக்கு பின் மும்பையை சேப்பாக்கத்தில் சென்னை அணி வீழ்த்தியுள்ளது.

சென்னை,

16வது ஐபில் தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சென்னை அணி எளிதில் இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை சேப்பாக்கத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் வீழ்த்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பின் மும்பையை சேப்பாக்கத்தில் சென்னை அணி வீழ்த்தியுள்ளதால், சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை - சென்னைக்கு இடையிலான 7 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 2008 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் மட்டுமே சென்னை வெற்றிபெற்றுள்ளது. அதற்கு பிறகு சேப்பாக்கத்தில் மும்பையின் ஆதிக்கமே இருந்துவந்த நிலையில், தற்போது தான் சென்னை அணி மும்பையை வீழ்த்தியுள்ளது.


Next Story