தோனி உள்ளிட்ட வீரர்களுடன் சி.எஸ்.கே. பயிற்சி முகாமில் பிறந்த நாள் கொண்டாட்டம்... யாருக்கு தெரியுமா?


தோனி உள்ளிட்ட வீரர்களுடன் சி.எஸ்.கே. பயிற்சி முகாமில் பிறந்த நாள் கொண்டாட்டம்... யாருக்கு தெரியுமா?
x

image courtesy: twitter/@ChennaiIPL

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே. வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி முகாமானது கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வரும் வேளையில் சி.எஸ்.கே. அணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். அவர்களோடு கேப்டன் தோனியும் சென்னை வந்தடைந்து சி.எஸ்.கே வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த பயிற்சி முகாமில் சென்னை அணியின் பந்துவீச்சு ஆலோசகரான எரிக் சைமன்சின் பிறந்தநாளை ஒட்டி சி.எஸ்.கே. நிர்வாகம் சார்பில் அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் தோனி உள்ளிட்ட பல வீரர்கள் கலந்து கொண்டனர். அப்போது தோனி அவருக்கு கேக் ஊட்டி வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story