ஆஸி.க்கு எதிரான தோல்வி ...'இன்று எங்களுக்கான நாள் அல்ல' - ரோகித் சர்மா


ஆஸி.க்கு எதிரான தோல்வி ...இன்று எங்களுக்கான நாள் அல்ல - ரோகித் சர்மா
x

Image Courtesy: AFP

நாங்கள் எங்களது திறமைக்கு ஏற்றவாறு விளையாடவில்லை என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

விசாகப்பட்டினம்,

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் இந்தியா 26 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதையடுத்து 118 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் புகுந்த ஆஸ்திரேலியா 11 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது,

இது ஏமாற்றம் அளிக்கிறது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாங்கள் எங்களது திறமைக்கு ஏற்றவாறு விளையாடவில்லை. நாங்கள் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த பிட்சில் 117 ரன்கள் என்பது போதுமானதல்ல. அது அது போதுமான ரன்கள் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.

தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்ததாக் நாங்கள் விரும்பிய ரன்களை அடிக்க எங்களால் முடியவில்லை. முதல் ஓவரில் சுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்த பின்னர் நானும், விராட்டும் 30-35 ரன்களை வேகமாக எடுத்தோம்.

ஆனால் அதன் பின்னர் நான் எனது விக்கெட்டை இழந்தேன். அதைதொடர்ந்து நாங்கள் விக்கெட்டுகளை தொடர்ந்து இழக்க ஆரம்பித்தோம். அது எங்களை ஆட்டத்தில் இருந்து பின்னுக்கு தள்ளியது. அந்த நிலையில் இருந்து மீண்டு வருவது என்பது எப்போதும் கடினமானது. இன்று எங்களுக்கான நாள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story