குடியரசு தினத்தையொட்டி வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய தோனி


குடியரசு தினத்தையொட்டி வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய  தோனி
x

image courtesy; instagram/sakshisingh_r

நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா இன்று கோலாகலாமாக கொண்டாடப்பட்டது.

ராஞ்சி,

நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா இன்று கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி ராஞ்சியிலுள்ள தனது பன்னை வீட்டில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.

இதனை இவருடைய மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story