தோனியின் 41-வது பிறந்த நாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


தோனியின் 41-வது பிறந்த நாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 7 July 2022 5:25 AM GMT (Updated: 7 July 2022 5:58 AM GMT)

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று பிறந்த நாள். அவர் 41ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, 2019ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் விளையாடி 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் தோனி. இந்திய அணிக்காக பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என அனைத்துவிதத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். இந்திய அணிக்கு 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன்.

ஒரு முழுமையான கிரிக்கெட்டரான தோனி, தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருவதையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்களும், கிரிக்கெட் உலகைச் சேர்ந்தவர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி.!! உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது.

எங்கள் சொந்த மண்ணில் (சென்னையில்) நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.





Next Story