டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சு தேர்வு


டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை  அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 30 Jun 2022 12:16 PM GMT (Updated: 30 Jun 2022 12:24 PM GMT)

திண்டுக்கல் அணிக்கு எதிரான டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

திண்டுக்கல்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரு ஆட்டங்கள் நடக்கின்றன. முதலில் தொடங்கும் 7-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை சந்தித்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும் போட்டியானது மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது.


Next Story